மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் முதல் கட்டமாக தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.