நவம்பர் 20இல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இன்றையதினம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ அவர்கள் சமுகமளிக்க முடியாததனால் அகழ்வுப்பணிகள் பிற்போடப்பட்டதாக அவர் கூறினார்.

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுதொகை பணம் வழங்குவது தொடர்பாக பேசப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இன்றையதினம் இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவுமாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

Related Posts