நவம்பர் மாதம் அளவில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த பிரதேசங்களில் சுற்றாடலை துப்பரவு செய்யும் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் தலைமையில் மாகாண சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்பொழுது 5 மாவட்டங்கள் டெங்கு நோய் அனர்த்த மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு , மத்திய , வடமேல் , சப்ரகமுவ தெற்கு ஆகிய மாகாணங்களே இவைகளாகும்.
சில மாவட்டங்களில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதுடன் மேலும் சில பிரதேசங்களில் புதிதாக டெங்கு நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேபோன்று டெங்கு நோயளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புத்தளம், உக்கவெல , மாத்தளை, பதுளை , ஆழியல அகிய பிரதேசங்களே இவ்வாறு இணங்காணப்பட்டுள்ளன.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதுடன் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்று தேசிய டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் அசித்த திசேரா இதன்போது தெரிவித்தார்.
இதற்கமைவாக சில வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மனிதவளம் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 2017ம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 301 உயிரிழந்துள்ளனர்.
மேலும் டெங்கு நோயாளர்களின் மொத்த தொகையில் 44 சதவீதமானோர் மேல்மாகாணத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.