ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் டினிப்ரோ என்ற நகரின் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை போராடி முழுவதுமாக கைப்பற்றியதாக ரஷ்ய இராணுவத்தளபதி யெவ்கெனி பிரிகோஷின் பிரகடனம் செய்த நிலையில், அதற்கான ஆதாரத்தை வாக்னர் ஆயுதக்குழு வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் பாக்முத் பகுதியில் ரஷ்ய தேசியக்கொடியை வீரர்கள் ஏற்றுவது தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான டினிப்ரோ நகரின் மீது, நேற்றிரவு ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல் டினிப்ரோ நகரின் 15 இடங்கள் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதற்கமைய, டினிப்ரோபெட்ரோவிஸ்க் மாகாணத்தின் ஆளுநரான சேர்ஹி லய்ஷாக் ‘ உக்ரைன் இராணுவத்தினருக்கு நன்றி, நாம் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து போராட வேண்டும்’ என தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் உக்ரைனின் பிரித்தானிய தூதர் கிய்வ் நகரில், நடைபெற்ற இராணுவ தாக்குதலை பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.