இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலூர் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.