நல்லைக்குமரன் நூல் வெளியீடும் யாழ் விருது வழங்கலும்

2014 ஆம் ஆண்டுக்கான நல்லைக்குமரன் நூல் வெளியீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று காலை 10 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த வருடத்திற்கான யாழ்ப்பாண மாநகர சபை சைவ சமய விவகார குழுவினால் வழங்கப்படும் யாழ் விருது சிவஶ்ரீ.சபா.வாசுதேவக்குருக்களுக்கு வழங்கப்பட்டது.

22 ஆவது நல்லைக்குமரன் நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, யாழ். மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன், சமய பெரியார்கள், சிவாச்சாரியார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts