நல்லூர் பிரதேச சபையில் காணி பறிப்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

ARMY-SriLankaதமிழ் மக்களை நிரந்தர அகதிகளாக வைத்திருப்பதற்காகவே தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் அடாத்தாகச் சுவீகரிக்கப்படுகின்றன. அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நல்லூர் பிரதேச சபையின் விசேட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. தலைவர் ப. வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரான அ. இரவீந்திரதாஸ், காணி சுவீகரிப்பு விடயத்தில் எமது கட்சி அரசுக்கு எதிராகவே உள்ளது. தமிழர்களின் நிலங்கள் பறிபோவதை நாம் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதை எதிர்த்தே குரல் கொடுத்து வருகின்றார். இது விடயத்தில் எமது சபை உறுப்பினர்களிடையே கட்சி பேதம் கிடையாது.

எல்லோருமே ஒன்றுபட்டு தீர்மானத்தை நிறை வேற்றுவோம் என்றார். இதனையடுத்துச் சபையில் ஏகமனதாகக் தீர்மானம் நிறைவேறியது.

Related Posts