நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸில் சரண் அடைந்துள்ளார். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வராசா ஜெயந்தன் என்பவரே துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

சம்பவ தினத்தன்று தப்பி ஓடிய குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் காலை அவர் தானாகவே சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான இவர் புனர்வாழ்வு பெறவில்லை என்றும் குறித்த நபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் நண்பர்கள் இருவரையும் 48 மணித்தியாலம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள யாழ்.நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts