நல்லூர் திருவிழா- பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம்

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து, யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், யாழ்ப்பாண பொலிஸாருடன் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டார்.

அதாவது விசேட திருவிழாக்கள் மற்றும் பூஜை நேரங்களை தவிர மீதி நேரங்களில் வீதிக் கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொதுமக்களை ஆலய சூழலில் உள்ள கடைகளுக்கு செல்லும் வகையில் அனுமதிக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இது தொடர்பில் விசேட ஊடக அறிவிப்பு யாழ்.மாநகர சபையினால் விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts