நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டணியினர் பாவித்தது கண்டனத்திற்கு உரியது – சி. தவராசா

thavarasaநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டணியினர் பாவித்தது மிகவும் கண்டிக்கதக்கதும், கவலைக்குரிய விடயமும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் தவராசா ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நல்லூர் தேர்த் திருவிழாவிற்கு விஜயம் செய்திருந்த இரா.சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய கூட்டணி முக்கியஸ்தர்கள் தேர்த் திருவிழா நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த டான் ரீவியின் தற்காலிக ஒளிபரப்பு நிலையத்திற்குள் அழையா விருந்தினர்களாக நுழைந்து, நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு ஆசிச் செய்தியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்குரிய சந்தர்ப்பத்தை டான் ரீ.வி.யினர் வழங்கிய போது, அச்சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்து சம்பந்தன் ஐயா அவர்கள் விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பிரச்சாரம் செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் கவலைக்குரியதுமாகும்.

அத்துடன் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூட்டணி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தனது தேர்தல் பிரசுரங்களை விநியோகித்ததாக பக்தர்கள் கவலையுடன் முறையிட்டுள்ளனர்.

Related Posts