நல்லூர் கந்தன் திருவழா ஏற்பாடுகள் சூடுபிடிப்பு

எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆலயத்துக்குள் நுழையும் நாற்பக்க வீதிகளிலும் பக்தர்கள் இளைப்பாறும் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆலயத்தில் சுவாமி வீதியுலா வருகையில் விளம்பரப் பதாகைகள் பார்வைக்குத் தென்படாத வகையில் ஆலய வெளிவீதி வளாகத்தைச் சுற்றி ஆலய நிர்வாகத்தால் மறைப்புக் கட்டப்படுகின்றது.

ஆலயத்தில் வெளிவீதியில் மணல் பரப்பும் நடவடிக்கையை மாநகர சபை மேற்கொண்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts