நல்லூர் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 19 ஆம்திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன், ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு கந்தன் ஆலய வெளிவீதியைச் சுற்றி விளம்பரப் பலகைகள், அரசியல் பதாகைகள் என்பன காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டு சிவனையும் சக்தியையும் குறிக்கும் சிவப்பு வெள்ளை நிறத்துணிகள் கட்டப்பட்டுள்ளன.

இம்முறை ஆலய சூழலில் நடைபாதை வியாபாரங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் மஹோற்சவம் தொடர்ச்சியாக 25 தினங்கள் இடம்பெறவுள்ளதையடுத்து நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2015fc-nallur

Related Posts