நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், இன்று காலை கொடியேற்ற பெருவிழா இடம்பெறவுள்ளது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

திருவிழாவை காண உள்ளூரில் மட்டுமன்றி புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழ் மக்கள் இக்காலப்பகுதியில் வருகை தருவது வழமை. அந்தவகையில், பக்தர்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts