நல்லூர் கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு வீதித் தடை!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெளி வீதி வலம் வருகின்ற காரணத்தால் கடந்த வெள்ளிக்கிழமை (24.10.2014) முதல் இதுவரையான காலப்பகுதியிலும் சுமார் ஒரு மணித்தியாலம் வரை வீதித் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

280px-Nallur_Kandasamy_front_entrance

நாளை 29 ஆம் திகதி புதன்கிழமை முருகப்பெருமான் சூரனோடு போரிடுகின்ற சூர சங்காரம் சிறப்பாக இடம்பெறவுள்ளமையால் ஆலயச் சூழலுடனான வாகனப் போக்குவரத்து இன்றும் நாளையும் பிற்பகல் 02 மணி தொடக்கம் இரவு 07 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த நேரங்களில் கோயில் வீதியைப் பயன்படுத்துபவர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts