நல்லூர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாண இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான மேற்படி போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், கஜதீபன், சுகிர்தன், பரஞ்சோதி, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இதுவரையில் குறைந்தளவான பொதுமக்களே இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts