நல்லூர் ஆலய சூழலில் தடையற்ற மின் விநியோகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சூழலில் தடையற்ற மின்விநியோகத்தை வழங்கும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விசேட பணிப்புரைக்கு அமைவாக கொழும்பிலிருந்து மின்பிறப்பாக்கி ஒன்று தருவிக்கப்பட்டுள்ளது.

nallur-genretter

இன்றைய தினம் ஆரம்பமாகி 25 தினங்களுக்கு திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பயனாக ஆலய சூழலில் தடையற்ற மின் விநியோகம் மேற்கொள்ள 500 கே.வீ வலுவுள்ள பாரிய மின்பிறப்பாக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts