நல்லூர்க் கந்தன் இரதோற்சவ பெருவிழா

நல்லைக் கந்தன் என்று அழைக்கப்படும் நல்லூர் முருகனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை 7மணிக்கு இடம்பெற்றது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

ஆலயத்தின் திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வெள்ளம் அலைமோதும் என்பதனால் ஆலயச் சூழலில் பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சாரணர்கள் முதலுதவிப் படைப்பிரிவனர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூர இடங்களில் இருந்த வரும் அடியார்களின் நலன் கருதி ஆலயச்சூழலில் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தில் உள்ள மடங்களில் அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

nallur1

nallur2

Related Posts