யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அரச பேரூந்தும் டிப்பர் வாகனமும் இன்று காலை 8.20 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ் நகரில் இருந்து பருத்தித்துறை நோக்கி பொதுமக்களை ஏற்றிச்சென்ற அரச பேரூந்து நல்லூர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு வாகன சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை தொடர்ந்து போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரையில் குறித்த இருவாகனங்களும் அகற்றப்படவில்லை இதனால் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.