நல்லூரில் கண்காணிப்புக் கமரா!

யாழ்ப்பாண மாவட்டம், வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் எதிர்வரும் 8ஆம் திகதி கோயிலின் மகோற்சவம் நடைபெறவுள்ளதால், அங்கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அங்கே கண்காணிப்புக் கமரா அமைக்கப்போவதாக யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.

இம்முறை நல்லூர் திருவிழாவிற்கு, புலம்பெயர் தமிழர்களும், தெற்கிலிருந்து சிங்கள மக்களும் பெருமளவில் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நல்லூரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே கண்காணிப்புக் கமரா பொருத்தப்படவுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts