நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
நல்லூர் பெருந்திருவிழாவைக் காண்பதற்காக நாலா திக்குமிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தினமும் முருகப்பெருமான் மாலை வீதியுலாவரும் காட்சியை காண வரும் அடியவர்களில் சிறுவர்கள் இளைஞர்கள் என்ற பேதம் இன்றி ஆலய சூழலில் காணப்படும் மணல் பரப்பில் பக்திமயமான உருவங்களை உருவாக்கி தமது திறமைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் பிரம்மிக்கவைக்கின்றன.
தினமும் பற்பல கைவண்ண கோலங்கள் மணலில் உருவாகின்றன.