நல்லூரானின் அதிசயம் !! திருட்டுப்போன ஓட்டோ திரும்ப வந்தது!!

நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்திற்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வருகை தந்து ஆலயப் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்தது.

இது தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.8.2015) அதே இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் யாழ்.பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கர வண்டியை யார் எடுத்துச் சென்றிருப்பார்கள்? மீண்டும் எவ்வாறு கொண்டு வந்து விட்டார்கள்? என்பது தொடர்பாக பொலிசார் தீவீர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts