ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.
‘மக்கள் ஆணைக்கு மதிப்பளி’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்பாட்டம் நேற்றுக் கொழும்பில் நடத்தப்பட்டது. இதில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர் கலந்துகொண்டனர்.