நல்லாட்சி அரசாங்கம் என்ன தான் செய்துள்ளது? மஹிந்த கேள்வி

கடந்த ஒரு வருட காலத்தினுள் நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது குறித்து கேள்வியெழுப்ப வேண்டியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

mahinda_kandy_002

நேற்று கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இக்கேள்வியை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஒருவருட காலத்தினுள் நாட்டுக்காகவும், பொதுமக்களுக்காகவும் என்ன செய்துள்ளது என்ற கேள்வி இன்று அனைத்து மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் தான் முன்வைக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதனை விட தலதா மாளிகை வழிபாடு போன்ற முக்கியவேலைகள் எனக்கு இருந்த காரணத்தினால் நான் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் ஓராண்டு நிகழ்விற்கு மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் ரோஹானவிடம் வினவிய போது, தனக்கு தெரிந்தவரை அவ்வாறான அழைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts