நல்லாட்சியை கைநழுவ விடமாட்டேன் – பிரதமர்

பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன மற்றும் பிரதான கட்சிகள் என்று இல்லாமல் அனைத்து கட்சிகளையும் எம்முடன் இனைத்துகொண்டு நல்லாட்சியை முன்னெடுப்போம். அனைத்து மக்களும் எம்மோடு இருப்பதால் நல்லாட்சியை ஒரு போதும் கைநழுவ விட மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டில் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கை பொருளாதாரத்தில் எவ்வித வீழ்ச்சியும் எற்படவில்லை என்று பெருமையுடன் நான் சொல்லிகொள்ளவும் விரும்புகின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால பதவியேற்று இன்றுடன் ஒரு நிறைவடைகின்ற நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுகின்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச பொருளாதாரத்தில் தோல்வி ஏற்பட்டாலும் எமது தேசிய அசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை ஒரு போதும் இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையாது.

வடக்கும் கிழக்கும் ஒன்றாக இருக்கும் போதும் சிங்களவர்கள், தமிழர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒன்றாக இருக்கும் போதும் நகரம், கிராமம் ஒன்றாக இருக்கும் போது எனது ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர பெறும் அர்ப்பணிப்பு செய்துள்ளார்.

இவ்வாறு நாட்டுக்காக பாடுபட்ட ஜனாதிபதிக்கு நான் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்க உதவிய அனைவருக்கும் நன்றி என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Related Posts