நல்லாட்சியில் அத்தியவசியப் பொருட்களை விட போதை பொருட்களே மலிவாக கிடைக்கின்றது

இன்று போதைப்பொருட்களே நாட்டில் மலிவாக கிடைப்பதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குருநாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது ஆட்சி காலத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு காலங்களில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு சலுகைவிலையில் வழங்கினோம். ஆனால் இம்முறை அரசாங்கம் மலிவாக பொருட்களை வழங்குவதாக விளம்பரம் மாத்திரம் செய்து கண்துடைப்பு செய்தது.

இன்று போதைபொருட்களே மக்களுக்கு மலிவாக கிடைப்பதாக அறிய முடிகிறது.எமது காலத்தில் 1500 ரூபாவுக்குவிற்பனை செய்யப்பட்ட ஹெரோயின் தற்போது 400 வுக்கும் 500 வுக்கும் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நல்லாட்சியின் மகிமையால் இன்று போதை பொருட்கள் நாட்டில் மலிந்துவிட்டது என அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts