வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து ஐ.நா. அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவுவதற்காக அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் நடுக்காட்டில் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மகிந்த சிந்தனையா? ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாட்டில் இதுவும் ஒன்றா என வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம். ரதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கேப்பாபிலவு மக்கள் தற்காலிகமாக தனியார் காணியொன்றில் சூரியபுரத்தில் தங்வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிஙகம், பிணிடியன்குளம் பிரதேச சபையின் உபதலைவர் எஸ். செந்தூரனுடன் சென்று பார்வையிட்டிருந்தோம்.
அப்பொது அம் மக்களின் அவல வாழ்வை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. தமிழனாக பிறந்ததற்காக அவர்கள் இவ்வாறான கொடுமையை அனுபவிக்கின்றனரா என்று எண்ணத்தோன்றியது.
போர் முடிந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் அப்பகுதி மக்கள் அவர்களது சொந்த காணிகள் வழங்கப்பட்டாது வலுக்கட்டாயமாக முட்கம்பி வேலிக்குள் சூரியபுரத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அங்கு குடிப்பதற்கு தணிணீர் இல்லை.மலசலகூடத்திற்கு பயன்படுத்தும் நீரையே குடிப்பதற்கு பயன்படுத்துமாறு கூறுகின்றனர்.
இது மட்டுமல்ல வாழ்வதற்குரிய தகுதியான இடம்கூட இல்லை. மதிய உணவை தேடி அலைந்து மாலை 5 மணிக்கே உண்ண முடிகின்றது. மழை பெய்தால் அவலவாழ்வு மருத்துவ வசதிகூட இல்லை. பாம்புகள், பூச்சிகள் என மக்கள் அவதியுறுவதை கண்ணூடாக கண்டோம்.
எனவே ஐ.நா மனிதநேய அமைப்பின் பிரகாரம் இம் மக்களின் அவல வாழ்வினை போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேசத்தை ஏமாற்ற நலன்புரி நிலையத்தை மூடி மக்களை நடுக்காட்டில் விட்ட அரசாங்கத்தின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.