நேற்று அதிகாலை சுமார் 25 அடி நீளம் கொண்ட பனை மீன் என்று அழைக்கப் படுகின்ற மிகப் பெரிய மீன் இனம் ஒன்று இறந்த நிலையில் நயினாதீவு தெற்கு மலையடி ஐயனார் ஆலய முன் கடல் எல்லையில் கரை ஒதுங்கியது.
இம் மீனை பலரும் பல இடங்களில் இருந்து வந்து அபூர்வமாகப் பார்வை இட்டனர் பின்னர் ஊர்காவற்றுறை நீதி மன்றத்தின் கட்டளையின் பணிப்பில் இம் மீனை கிடங்கு வெட்டி தாட்பதட்காக,நயினாதீவு பிரதேச சபை உப அலுவலகத்தினால் பலமணி நேரம் கரைக்கு இழுத்துவரும் முயட்சி பலனளிக்காததினாலும் இன்று இவ் ராட்சத மீனை சிறு துண்டுகளாக்கப் பட்டு இழுத்து வரும் ஏற்பாடுகள் நடை பெறுகின்றது.