நயினா தீவிற்கு விசேட போக்குவரத்து சேவை

Suntharam arumai_CIநயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு நயினா தீவிற்கு விசேட போக்குவரத்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் எதிர்வரும் ஜுன் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால், போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்.அரச அதிபர் தலைமையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பொலிஸார் கடற்படை, பிரதேச செயலர்களுக்கு இடையில்; நேற்று நடைபெற்றது.

இங்கு கருத்துதெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

‘நயினா தீவு ஆலய உற்சவத்தினை முன்னிட்டு, பொதுமக்கள் எதுவித தடங்களுமின்றி போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் படகு சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

22, 23, 24 ஆம் திகதிகளில் முக்கிய திருவிழா காலங்களில் காலை 6 மணி முதல் இரவு 12 மணிவரை விசேட படகு சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

குடிநீர் வசதிகளுக்காக காலை 6.00 முதல் 10.00 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையும் நீர் விநியோகம் செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

Related Posts