நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

நடிகை நயன்தராவுக்கு நேற்று பிறந்த நாள். இதனை சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது நயன்தரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

nayan-siva-mohan

24ஏம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை புறநகரில் நடந்து வருகிறது. நேற்றும் நயன்தாரா கலந்து கொண்டு நடித்தார்.

அப்போது சிவகார்த்திகேயன் கேக் ஏற்பாடு செய்து நயன்தாரா பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். நயன்தாரா பிறந்த நாள் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழந்தார்.

சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு மலர் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். நயன்தாரா பிறந்த நாளையொட்டி படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

Related Posts