நயன்தாரா திறமையான நடிகை: விக்ரம்

விக்ரம்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘இருமுகன்.’ இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். சிபுதமீன்ஸ் தயாரித்து உள்ளார். ‘இருமுகன்’ படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Iru-Mugan-new-stills

விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

நயன்தாராவுடன் இதுவரை நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் அவர் என்னுடன் ஜோடி சேர்ந்து உள்ளார். நயன்தாரா இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் வேறு மாதிரி ‘மேஜிக்’ போல் இருக்கும். அவர் தொழிலில் ஈடுபாடு உள்ள திறமையான நடிகை. அர்ப்பணிப்புடன் நடித்து இருக்கிறார். நித்யாமேனனும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

இவ்வாறு விக்ரம் பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், நிவின் பாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டனர். ‘இருமுகன்’ படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Posts