நயன்தாரா சாயலில் இன்னொரு நடிகை மானஸா!

நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தபோது, பூபதி பாண்டியன் இயக்கிய காதல் சொல்ல வந்தேன் படத்தில் என்ட்ரியானவர் மேக்னாராஜ். அவர் நயன்தாரா சாயலில் இருந்ததால் ஜூனியர் நயன்தாரா என்று அப்போது அழைத்தனர். அதோடு, இவரது வருகையினால் நயன்தாராவிற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில், நயன்தாரா சாயலில் இப்போது மானஸா என்ற இன்னொரு புதுமுக நடிகையும் கோலிவுட்டில் கவலைப்படாத காதலர் சங்கம் என்ற படத்தில் என்ட்ரியாகிறார். டைரக்டர் ஆனைவாரி ஸ்ரீதர் இயக்கும் இந்த படத்தில் அறிமுகமாகும் இந்த மானஸா, சென்னை ஆவடியைச்சேர்ந்தவர். மேலும், இந்த படத்தின் கதையை நயன்தாராவை மனதில் கொண்டுதான் ரெடி பண்ணினாராம் ஆனைவாரி ஸ்ரீதர். ஆனால், தற்போது நயன்தாராவின் சம்பளம் எகிறி நிற்பதால் அவரை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டதாம். அதையடுத்து, நயன் தாராவைப்போன்று ஒரு நடிகை வேண்டும் என்று தேடிவந்தபோதுதான் இந்த மானஸா அவர் கண்ணில் சிக்கியிருக்கிறார்.

பார்ப்பதற்கு சின்ன வயது நயன்தாராவை மாதிரியே மானஸா இருந்ததால், டபுள் ஓகே சொல்லி அவரை டிக் அடித்து விட்ட ஆனைவாரி ஸ்ரீதர், பிப்ரவரி மாதம் கவலைப்படாத காதலர் சங்கம் படப்பிடிப்பை தொடங்குகிறார். இந்த படத்தை மருத்துவர் மூவீஸ் டி.கே.ராஜா தயாரிக்கிறார்.

Related Posts