கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் ஒரு பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க போவதாக நாம் செய்திகள் அறிந்திருப்போம்.
இந்நிலையில் விஜய்யின் 59வது படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதலில் நயன்தாரா தான் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது.