நயன்தாராவைப் பார்த்து வியந்த விக்ரம்!

நயன்தாராவைப் பொறுத்தவரை சம்பள விசயங்களில் கறாலாக இருப்பார். அதேபோல் படங்களின் ப்ரமோஷன்களில் கண்டிப்பாக கலந்து கொள்ள மாட்டேன் என்பதிலும் உறுதியாக இருந்து வருகிறார்.
அதன்காரணமாகவே தெலுங்கில் நடித்த அனாமிகா படத்திற்கு பிறகு ஓராண்டு அவர் தெலுங்கு படங்களில் நடிக்க ரெட்கார்டு போடப்பட்டது. ஆனபோதும், இப்போதும் அவர் தனது கொள்கையில் மாறவில்லை. நடித்து வரும் தெலுங்கு படங்களின் ப்ரமோஷன்களுக்கு என்னை அழைக்கக்கூடாது என்று முன்கூட்டியே சொல்லித்தான் கமிட்டாகியிருக்கிறாராம்.

vickram-nayan-irumukam

இப்படி தான் நடிக்கும் படங்களின் விளம்பர சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்து வரும் நயன்தாரா, படப்பிடிப்பு என்று வந்து விட்டால் அளவற்ற ஈடுபாடு காட்டுகிறாராம். தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே ஸ்பாட்டில் காணப்படும் அவர், தேவையில்லாத விசயங்களை ஸ்பாட்டில் பேசுவதில்லையாம். அந்த படம் பற்றியும், படத்தில் உள்ள கதாபாத்திரங்களைப்பற்றியும்தான் அதிகமாக பேசுகிறாராம். இப்படி இருமுகன் பட ஸ்பாட்டில் நயன்தாரா டிஸ்கஷன் செய்வதைப்பார்த்த விக்ரம் நிஜமாலுமே அசந்து விட்டாராம்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் தான் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான காஸ்டியூம், மேக்கப் என அனைத்தையும் தனது வீட்டில் இருந்து போட்டபடியே ஸ்பாட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் நயன்தாரா, காரில் வரும் வழியிலேயே டயலாக் பேப்பரை மனப்பாடம் செய்தபடி, இந்த காட்சிக்கு எந்த மாதிரி பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்று தனக்குள் ஒரு தீர்மானம் செய்தபடியே வருகிறாராம்.

Related Posts