நயன்தாராவுக்கு காதலன் இல்லையாம்

ரஜினி, விஜய், அஜீத் என பிரபலங்களுடன் ஜோடியாக நடித்த நயன்தாரா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

nayan

மாயா, நீ எங்கே என் அன்பே படங்களில் நடித்தவர் தற்போது ‘டோரா’ படத்தில் நடித்து வருகிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்தபோதும் அவருக்கு ஜோடியாக இளம் ஹீரோக்கள் நடித்தனர்.

ஆனால் ‘டோரா’ படத்தில் அவருக்கு ஜோடியே கிடையாது என்று பட வட்டாரங்கள் சொல்கின்றன. திகில் படமான இது கொலை சம்பவம் ஒன்றை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

சீரியஸான கதை என்பதால் காதலுக்கு இடமில்லையாம். எனவே நயனுக்கு ஜோடியாக ஹீரோ யாரும் கிடையாது.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னை ஈசிஆர், டைட்டில் பார்க் பகுதிகளிலும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் நடந்துள்ளது.

Related Posts