எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், ”நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்றிரவு அல்லது நாளை காலை கட்சிக்கிடையே கலந்துரையாடி தீர்மானத்தை வெளியிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.