நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் : சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைந்துள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் எதிராக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸ் திணைக்களம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏதேனும் அவசரநிலை அல்லது தகவல்களை ‘1997’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts