நன்றி தலைவா: ரஜினியின் வாழ்த்தால் மகிழ்ச்சியடைந்த சச்சின்

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது.

இந்நிலையில், இந்த டிரைலரை பார்த்த ரஜினிகாந்த், சச்சினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக சச்சினும் ‘நன்றி தலைவா. படத்தை தமிழில் பார்த்து மகிழுங்கள்’ என்று சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரை இணைத்து அனுப்பியுள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக திகழ்ந்த சச்சினும், இந்திய திரையுலகில் ஜாம்பவானாக வலம் வரும் ரஜினியும் இவ்வளவு சகஜமாக உரையாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Posts