முல்லைத்தீவு – நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதி பெருக்கெடுத்துள்ளது.
வடக்கில் தற்போது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில், குறித்த வாய்க்கால் பகுதி இன்று (புதன்கிழமை) காலை பெருக்கெடுத்து கடலுடன் சங்கமித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை நீடிப்பதோடு, குறிப்பாக வடக்கில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 100-150 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, முல்லைத்தீவு, திருகோணமலை, காங்கேசன்துறை கடற்பிராந்தியங்களில் மாலை வேளைகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் அதனால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.