நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழில் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 4 ஆயிரத்து 800 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களை விட இந்த வருடம் ஏற்பட்டுள்ள அதிக வறட்சி காரணமாக நந்திக்கடல் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், நந்திக்கடலை அண்டிய சிறிய களப்புகள் மற்றும் குளங்கள் என்பனவும் வறண்டு காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக மீன்கள் உயிரிழந்து காணப்படுவதாகவும் இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts