நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வெசாக் மற்றும் சிங்கள வருடப் பிறப்பை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவது போன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

sakthivel-231215-(1)

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மகஜர் ஒன்றை கையளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருட்தந்தை சக்திவேல் இவ்வாறு கூறினார்.

Related Posts