நதியா படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு

தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் முழுக்க பெண்கள் மட்டுமே நடித்து உள்ளனர். நதியா, இனியா, கோவை சரளா, ஈடன், ஆர்த்தி, ஆரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பேய் அமானுஷ்யங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது.

nathiya

மேலை நாட்டு கலாசாரமான ‘லெஸ்பியன்’ பற்றிய சர்ச்சை கருவை மையமாக வைத்து இந்த படத்தை துளசிதாஸ் இயக்கி உள்ளார். இவர் மலையாளத்தில் பிரபல டைரக்டராக உள்ளார். கே.மணிகண்டன் தயாரித்து உள்ளார். விடுதியில் தங்கி ஆஸ்பத்திரியில் நர்சு வேலை பார்க்கும் இரு பெண்கள் மத்தியில் உருவாகும் ஈர்ப்புகளையும் திருமணம் செய்து கொள்ள தயாராகும் போது ஏற்படும் பிரச்சினைகளையும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

ஒரு கொலையும் நடக்கிறது. நதியா போலீஸ் அதிகாரியாக வந்து கொலையாளியை தேடுகிறார். இந்த படத்தில் கவர்ச்சி மற்றும் ஆபாச காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனால் தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது அங்குள்ள உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆபாச காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர முடியாது என்று மறுத்தனர்.

பின்னர் பெண்ணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச காட்சிகளை வெட்டி நீக்கி விட்டு, ‘யு ஏ’ சான்றிதழ் அளித்தனர்.

Related Posts