நண்பனுக்காக பாட்டு பாடிய கௌதம் மேனன்

‘மொழி’, ‘அபியும் நானும்’ ‘பயணம்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘உப்பு கருவாடு’. இதில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, குமரவேல், சாம்ஸ், ரக்ஷிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

gowtham-menon

பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் இசையமைக்கிறார். இவருடைய இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘புது ஒரு கதவு திறக்குது…’ என்ற பாடலை கௌதம் மேனன் பாடியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் ராதாமோகன் கூறும்போது, இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது.

கௌதம் அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு துள்ளலை தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ் கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார்.

படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். கௌதம் மேனன் பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார்.

கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Related Posts