நட்சத்திர கிரிக்கெட்: கோப்பை அறிமுகம்

நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதி திரட்ட, ஏப்., 17ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக, ஆறு பேர் வீதம், எட்டு அணிகள் மோத உள்ளன. இதில், நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா தலைமையிலான அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.

star-cricket

கோப்பை அறிமுக விழா, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு, தடபுடலாக நடந்தது. கோப்பையை, நடிகர் சங்க தலைவர் நாசர் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியை, காங்., செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, தொகுத்து வழங்கினார்.

ஆட்டம், பாட்டத்துடன் நடந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் விக்ரம், கார்த்திக், பிரபு, விஷால், கருணாஸ், வடிவேல், விஷ்ணு, மிர்ச்சி சிவா நடிகையர் அமலாபால், ஸ்ரீதிவ்யா, பிந்துமாதவி, தமன்னா, வரலட்சுமி, ரேகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நடிகர் பிரபு பேசுகையில், என் தந்தை, வீட்டில் இருந்ததை விட, நடிகர் சங்கத்தில் தான் அதிக நேரம் செலவிட்டார். அந்த கட்டடத்தை மீண்டும் கட்ட வேண்டியது, நம் அனைவருக்கும் அவசியம், என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கிரிக்கெட் அணிகளின் விளம்பர துாதுவர்களாக நியமிக்கப்பட்ட நடிகையர் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. கிரிக்கெட் போட்டியிலும், இவர்கள் பங்கேற்பரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Related Posts