நட்சத்திர கிரிக்கெட்டுக்கு சரத்குமாரை அழைக்கவில்லை

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக நடந்த 17ந் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு முன்னாள் தலைவர் சரத்குமாருக்கு அழைப்பு இல்லை என்று ராதிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு முன்னாள் தலைவர் சரத்குமாருக்கோ, செயலாளர் ராதாரவிக்கோ, பொருளாளர் வாகை சந்திரசேகருக்கோ அழைப்பு இல்லை. இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நாங்களும் நடிகர் சங்க வளர்ச்சிக்காக பாடுபட்டிருக்கிறோம். கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியிருக்கிறோம். இப்போதுள்ள நிர்வாகிகளுக்கு மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் மன பக்குவம் இல்லை. வழிநடத்தி செல்வதற்கு சரியான ஆட்கள் இல்லை. நடிகர் சங்க கட்டடம் குறித்து கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். அது முடிந்து விட்டது. இப்போது புதிய கட்டடம் கட்டும் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம் என்கிறார் ராதிகா.

Related Posts