நட்சத்திரங்களுக்கு வலைவீசும் திமுக!

அ.தி.மு.க. போல் தி.மு.க.வும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு நட்சத்திரப் பட்டாளத்தை சேர்ப்பதற்காக திரைமறைவில் பேச்சுக்கள் நடாத்தி வருகின்றது. இது தொடர்பாக தி.மு.க. தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், மகளிர் அணி நிர்வாகி விஜயா தாயன்பன் ஆகியோருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.

soory-nameetha

அ.தி.மு.க. வில் தேர்த்தல் பிரச்சாரத்திற்காக ஒரு நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. ஆனால் தி.மு.க. வில் அப்படி இல்லையெனவும் அப்படி ஒரு நட்சத்திரப் பட்டாளத்தை தி.மு.க.வுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற கட்சியின் தலைவர் மு. கருணாநிதி விரும்புகின்றார். இதற்கான பொறுப்பு, ஏ.எல்.அழகப்பன், மகளிர் அணி நிர்வாகி விஜயா தாயன்பன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க.வில் இருந்த ராதாரவி, தியாகு போன்றவர்கள் அதிமுகவில் இணைந்து விட்டனர். நடிகை குஷ்பு காங்கிரசில் இணைந்துவிட்டார். கடந்த தேர்தலின்போது தி.மு.க. விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்.

இந்நிலையில், திமுகவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக இமான் அண்ணாச்சி அழைத்து வரப்பட்டுள்ளார். மேலும், சிரிப்பு நடிகர்கள் பரோட்டா சூரி, சிங்கம் புலி, போண்டா மணி, கிங்காங், மனோகர், நெல்லை சிவா, நடிகையர் நமீதா, பாபிலோனா போன்றவர்களை தி.மு.க. பிரசாரத்திற்கு இழுக்கும் வகையில் இரகசிய பேச்சு நடந்து வருகிறது எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

Related Posts