நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவை!

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதியில் உள்ள தொடருந்துக் கடவையில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை சமிச்ஞைகளும் இயங்காதுள்ளன.

முன்னெச்சரிக்கை ஒலி, சமிச்கை விளக்குகள் என்பன இயங்காதுள்ளதால் நடேஸ்வர கல்லூரி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளை இராணுவத்தினர் விடுவிக்காமல் வைத்துள்ள போதும் பாடசாலையைச் சூழவுள்ள உள்ள மக்கள் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வு நடைபெறுகின்றது.

அந்தப் பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவை உள்ள கல்லூரி வீதியையே அதிகம் பயன்படுத்துக்கின்றனர்.

பாதுகாப்பு சுற்று மதில் இல்லாது காணப்படும் பாடசாலையின் எல்லை தொடருந்துத் தடத்துக்கு அருகிலேயே காணப்படுவதால் முன்னெச்சரிக்கை இல்லாமல் பயணம் செய்யும் தொடருந்துகளால் ஆபத்து ஏற்படும் நிலைமையும் காணப்படுகின்றது.

Related Posts