Ad Widget

நடேசனின் மகன் பிரித்தானியா பாராளுமன்றில் சாட்சி

வெள்ளைக் கொடியோடு சென்று சிங்கள ராணுவத்திடம் சாரணடைந்த, நடேசன் படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இன் நிலையில் இன்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றில் நடேசனின் மகன் பல பிரித்தானிய MP க்களுக்கு முன்னதாக முதல் தடவையாக சாட்சியம் அளித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்றும். இலங்கை ராணுவம் தனது அப்பாவை கொலைசெய்தது என்ற உண்மையை அவர் உரக்கச் சொல்லியுள்ளார். அதுமட்டுமல்லாது கள மருத்துவராக பணியாற்றிய உயற்சியும் , முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகளை பாராளுமன்றில் பதிவுசெய்தார். கல்விமான்கள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் செயல்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகளை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்துகொண்டார்கள். இதனை பிரித்தானிய ஒருங்கிணைப்புக் குழுவான TCC ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாட்சியங்களைக் கேட்டு அறிந்துகொண்ட பிரித்தானிய MPக்கள் , தாம் இதனை பிரித்தானிய பாராளுமன்றல் வரை கொண்டு செல்லவுள்ளதாக உறுதியளித்துள்ளார்கள். இலங்கையில் இன்றுவரை, ஒரு அமைதியாக சூழல் திரும்பவில்லை. இலங்கையில் நடைபெற்ற மற்றும் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு இதுவரை இலங்கை அரசு தகுந்த பொறுப்புக்கூறலை என்றும் பிரித்தானியா MPக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலையை வெளிக்கொண்டுவரும் இன் நிகழ்சிக்கு பெரும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டது. அமைதியாக நடைபெற்ற இன் நிகழ்வை நடக்காமல் செய்ய, இன் நிகழ்வை நடத்துபவர்கள் புலிகள் என்றும். அவ்வமைப்பு பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும். அவர்கள் புலிக்கொடியைக் கொண்டுவர உள்ளார்கள் என்றும். எனவே இன் நிகழ்வுக்கு செல்லவேண்டாம் என்று பிரித்தானிய MPக்களுக்கு சிலர் அனாமதேய தொலைபேசி அழைப்புகளை விடுத்தார்கள் என்றும் அறிகிறோம்.

பிரித்தானியாவில் இயங்கிவரும் “லண்டன் தமிழர் பேரவை” என்னும் அமைப்பை சார்ந்த சிலர், என்று கூறி சிலர் தமக்கு தெரிந்த MPக்களை சந்தித்து இன் நிகழ்வுக்குச் செல்லவேண்டாம் என்று கூறியுள்ளமை ஆதாரபூர்வமாக பதிவாகியுள்ளது. அதாவது நான் கூட்டத்தை நடத்தாவிட்டால். வேறு யாரும் நடத்த கூடாது என்ற மனப்போக்கில் தான் சில தமிழ் அமைப்புகள் இன்றுவரை இயங்கிவருவது பெரும் வேதனை தரும் விடையமாக உள்ளது.

மே 18ம் திகதி லண்டனில் உள்ள பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கு முன்னால் பாரிய நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Related Posts