நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் கைது

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியில் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த குறித்த பெண் பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவும் இருவருக்கிடையே இடம்பெற்ற முரண்பாடுகளை அடுத்து பணம்கொடுத்த பெண் பணம் வாங்கிய பெண்ணிற்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்று இறுதியில் இவர்களது சண்டை தாண்டிக்குளம் பிரதான வீதியின் நடுவே குறித்த பெண் அமர்ந்து இருந்துள்ளார்.

பல மணி நேரங்கள் வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பெண்னை பொலிஸார் அதிரடியாக கைது செய்தபோது வர மறுத்த பெண்னை வலுக்கட்டாயமாக தூக்கி வாகனத்தில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வவுனியா பொலிசார் சுமார் ஒருமணிநேரம் தாமதமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது. வீதியில் அமர்ந்த பெண்ணினால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts