நடுக்காட்டில் படமான அனிருத் பாடல்

ஹரிஷிகேஸ், சஞ்சிதா ஷெட்டி, மியா, நரேன், அம்ஜத்கான், அர்ஜுன் சிதம்பரம் நடிக்கும் படம் ‘ரம்’. புதுமுகம் சாய்பரத் இயக்குகிறார், டி.விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். திகில் படமான ரம்மிற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெற இருக்கும் “ஹோலோ ஹேலோ அமிகோ… என்ற பாடலை அனிருத் சமீபத்தில் வெளியிட்டார்.

aniruth

இந்த பாடலை நடுக்காட்டில் படமாக்கி திரும்பியிருக்கிறார்கள். ஹீரோ ஹரிஷிகேஸ், ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டியை காட்டில் நடன கலைஞர்களுடன் ஆடவிட்டு படமாக்கி இருக்கிறார் நடன இயக்குனர் சதீஷ். முற்றிலும் புதுமையான முறையில் படமாக்கி உள்ள இந்த பாடலையும், காட்சியையும் விரைவில் வலைத்தளங்களில் வெளியிட இருக்கிறார்கள்.

Related Posts