நடுக்கடலில் சிக்கிய படகு: அவுஸ்திரேலியா மறுப்பு

aust-falgபுகலிடக்கோரிக்கையாளர்கள் 152 பேரை ஏற்றிச் சென்ற படகு இயந்திரக்கோளாறு காரணமாக கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கி உள்ள செய்தியை அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் மறுத்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி, தமிழகத்தின் புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் 32 பெண்கள், 37 குழந்தைகள் உட்பட 152 பயணித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த படகு எண்ணெயக் கசிவுக் காரணமாக அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து சுமார் 250 கீ.மி தொலைவில் நடுக்கடலில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையிலேயே இச்செய்தினை ஸ்கொட் மொரிஸன் மறுத்துள்ளார்.

‘நடுக்கடலில் படகு சிக்கித்தவிபதாக தகவல்கள் இல்லை, அவ்வாறு படகு ஏதும் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் கிடைத்தால் அதனை மீட்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts